கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சர்கள் முதல் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் வரை என அனைவரும் இவ்விவகாரத்திற்காக டெல்லிக்கு கடிதம் எழுதினரே தவிர தீவிரமான எந்த முயற்சியையும் எடுத்து மீனவர்களை காக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.
இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: 4 மீனவர்கள் கைது - தமிழ்நாடு மீனவர்கள்
ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வர மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

lanka
இந்நிலையில், நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வர மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.