ராமநாதபுரம் அருகே முயல்கள் வேட்டையாடப்படுவதாக வன பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, ராமநாதபுரம் வனக்காவலர் இ. ராஜசேகரன், வன பாதுகாப்பு படை வனக்காவலர் சடையாண்டி தலைமையில் வன காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டூரணி கிழக்கு கடற்கரை சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வைத்திருந்த சாக்கு பையில் கால்கள் கட்டப்பட்டு உயிருடன் இருந்த 4 முயல்களை பறிமுதல் செய்தனர்.