ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில், அதிகாலை 3 மணிக்கு எஸ்.பி பட்டினம் கடற்கரை பகுதிக்கு சென்ற அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது கடற்கரையில் அருகே உள்ள சதுப்பு நிலக்காடுகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கஞ்சா மூட்டைகளை கைபற்றினர்.