ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலீல் அகமது. இவர் தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகன் ஷேக்மீரான் சென்னை வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள உணவகத்தில் நண்பர்களுடன் உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஷேக்மீரானை வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றது.
வடக்குகடற்கரை முத்துமாரி செட்டி தெருவில் உள்ள வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். ஷேக்மீரானின் சகோதரர் நூரூல் ஹக் இந்த கும்பலிடம் ரூபாய் 40 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதனை பல மாதங்கள் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். அதனை வசூலிப்பதற்காக அண்ணனுக்கு பதிலாக தம்பியை கடத்தி கும்பல் மிரட்டியுள்ளனர்.