கரோனா வைரஸ் பாதி்ப்பு காரணமாக தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் இன்று (ஜூலை16) புதிதாக 29 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராமநாதபுரத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா! - Ramanathapuram district news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
![ராமநாதபுரத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா! ராமநாதபுரம் மருத்துவமனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:00:54:1594906254-tn-rmd-03-corona-update-script-7204441-16072020181343-1607f-02509-554.jpg)
ராமநாதபுரம் மருத்துவமனை
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின், எண்ணிக்கை 2,167ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் பரமக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்த நிலையில் கரோனா உயிரிழப்பு 52ஆக அதிகரித்துள்ளது.