தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 304 வழித்தடங்களில் 275 பேருந்துகள் இயக்கம்! - The task of cleaning the buses

ராமநாதபுரம் மாவட்டத்தில், 112 நகரப்பேருந்துகள், மாவட்டங்களுக்கிடையே இயங்கும் 163 பேருந்துகள் என, மொத்தமாக 275 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

ராமநாதபுரம்: 304 வழித்தடங்களில் 275 பேருந்துகள் இயக்கம்
ராமநாதபுரம்: 304 வழித்தடங்களில் 275 பேருந்துகள் இயக்கம்

By

Published : Jun 27, 2021, 7:07 PM IST

ராமநாதபுரம்:ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ராமநாதபுரத்தில் பேருந்துகளை இயக்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை(ஜூன்.28) கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் 112 நகரப்பேருந்துகள், மாவட்டங்களுக்கிடையே இயங்கும் 163 பேருந்துகள் என, மொத்தமாக 275 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு 24 வழித்தடங்களில் பேருந்துகள் இயங்காது என்று போக்குவரத்துத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 50 விழுக்காடு இருக்கைககளுடன் குளிர்சாதன வசதி இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும், பயணிகள் கரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதை முன்னிட்டு, இன்று(ஜூன்.27) பேருந்துகளில் பேட்டரி மின்னூட்டம் குறித்து சரிபார்க்கப்பட்டு, பழுதுகள் நீக்கப்பட்டன. தொடர்ந்து பேருந்துகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: ஜூன் 28 முதல் விரைவுப் பேருந்துகள் இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details