ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நவாஸ்கான். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள இவர் தற்போது குடும்பத்துடன் ராமநாதபுரம் நேரு நகரில் வசித்துவருகிறார். இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த
தகவல் அடிப்படையில் மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனையிட வந்தனர்.
260 கிலோ கஞ்சா
இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு காவலர்கள் நேற்று நள்ளிரவிலேயே நவாஸ்கான் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது 8 கோணிப்பைகளில் 260 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2.60 கோடியாகும்.
நவாஸ்கான் அவரது மகன்கள் வாசிம்கான், அப்துல்பாசித் இதுதொடர்பாக நவாஸ்கான் அவரது மகன்கள் வாசிம்கான், அப்துல்பாசித் ஆகியோரை கேணிக்கரை காவலர்கள் கைது செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய ராமேஸ்வரம், மண்டபத்தைச் சேர்ந்த 9 பேரையும் பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள் கைது செய்யப்பட்டவர்களிடம் நேற்று கேணிக்கரை காவல்நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் விசாரணை நடத்தினார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக்கிடம் கேட்டபோது, சமீபத்தில் தனுஷ்கோடி அரிச்சல் முனைப்பகுதியில் 24 கிலோ, மண்டபத்தில் 20 கிலோ கடலில் மிதந்து வந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கியிருப்பது தெரியவந்தது. தற்போது கைப்பற்றப்பட்ட 260 கிலோ கஞ்சா தொடர்பாக 12 பேரிடம் விசாரணை நடந்துவருகிறது எனத் தெரிவித்தார்.