தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் - கடல் அட்டைகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக பிடிக்கப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் தேவிப்பட்டிணம் கடற்கரையில் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

urchins
urchins

By

Published : Aug 25, 2021, 11:04 PM IST

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.

இதனை சட்டவிரோதமாக பிடித்து இலங்கைக்கு கடத்தும் நிகழ்வு தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. அதனைத் தடுக்க ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ராமநாதபுரம் தேவிப்பட்டினம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த கடல் அட்டை பிடிக்கப்பட்டு இருப்பதாக இராமநாதபுரம் உதவி வனப்பாதுகாவலர் கணேஷ் லிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தேவிப்பட்டணம் தேவாலயம் அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் வனவர் சடையாண்டி வனப்பாதுகாப்பு படை முனியசாமி, மணிகண்டன், பிரபு,சுதாகர், டேனியல் உள்ளிட்டோர் அடங்கிய வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரையில் பழுதடைந்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 கிலோ மதிப்புள்ள கடல் அட்டையை மீட்டு ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு இராமநாதபுரம் ஜே.எம் 1 மேஜிஸ்ட்ரேட் சிட்டிபாபு முன்னிலையில் அவை அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக வனத்துறையின் சார்பில் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : ’கடல் அட்டை பிடிக்க தடை நீக்கம் குறித்து பரிசீலனை’ - அமைச்சர் கிரிராஜ் சிங்

ABOUT THE AUTHOR

...view details