மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் சித்தாமைகள் கரைப்பகுதிக்கு வந்து முட்டை இட்டுச்செல்வது வழக்கம். அந்த முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து முட்டைப் பொரிப்பகங்களில் பாதுகாப்பாக வைப்பர். பின் 60 நாட்களில் முட்டை பொரிந்தவுடன் ஆமை குஞ்சுகளை கடலில் விடுவர்.
இந்த ஆண்டு தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரையிலான கடல் பகுதிகளில், தற்போது வரை 4000க்கும் மேற்பட்ட சித்தாமை முட்டைகளை ஆமைகள் இட்டுச் சென்றுள்ளன. அவை அனைத்தும் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டு முகுந்தராயர் சத்திரம் அருகே அமைக்கப்பட்ட முட்டை பொரிப்பகத்தில் தேதி வாரியாக பாதுகாத்து வைக்கப்பட்டது.