தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்துவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, புத்தளம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்படகை பிடித்து சோதனை செய்தனர். அதில், 74 மூட்டைகளில் 2379 கிலோ பீடி இலைகளை படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இலங்கைக்கு கடத்த முயன்ற '2379 கிலோ பீடி இலை' பறிமுதல்! - 74 மூட்டைகளில் 2379 கிலோ
ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த முயன்ற ஆறு மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களிடம் இருந்து 2379 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்.
ஆறு தமிழக மீனவர்கள்
பின்னர் மீனவர்கள் ஆறு பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், பறிமுதல் செய்த 2379 கிலோ பீடி இலைகளை கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.