தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதசுவாமி கோயிலில் ஒரே நாளில் 2,200 பேர் சுவாமி தரிசனம் - ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்

ராமநாதபுரம்: ஊரடங்குத் தளர்வில் கோயில்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்ட நிலையில், முதல் நாளான நேற்று(செப்.1) ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இரண்டாயிரத்து 200 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

2,200 people visited the Ramanatha Swamy Temple on yesterday
2,200 people visited the Ramanatha Swamy Temple on yesterday

By

Published : Sep 2, 2020, 7:00 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டு பக்தர்கள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அரசு உத்தரவளித்தது. அதைத் தொடர்ந்து, ஐந்து மாதங்களுக்குப் பிறகு நேற்று(செப்.1) கோயில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட அனுமதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் காலை 6 மணி முதல் கிருமி நாசினி கொண்டு கைகளைத் தூய்மை செய்தல், முகக் கவசம் அணிதல், உடல் வெப்பம் பரிசோதனை செய்தல் ஆகிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்தனர்.

கோயில் நிர்வாகம் அளித்த தகவலின்படி வெளிமாவட்டம், மாநிலங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 200 பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தது தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details