ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது 2,600 பேர் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்கள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500க்கும் அதிகமானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அங்கு கரோனவிற்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் ஒரே நாளில் 5 பெண்கள், 15 ஆண்கள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர்.