ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழ மேலச்செல்வனூர், தேர்தங்கல், காஞ்சரங்குளம் சக்கரக்கோட்டை, பெரிய கண்மாய், தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பறவைகளின் கணக்கெடுப்பு கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது.
இதில் அந்தந்தப் பகுதி வனச்சரகர்கள் தலைமையில் எட்டு பேர் கொண்ட பறவைகள் வல்லுநர் குழு பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்தனர். கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை நல்ல முறையில் பெய்ததால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பிக் காணப்பட்டன.
ராமநாதபுரத்திற்கு 15 விழுக்காடு வெளிநாட்டுப் பறவைகள் வருகை இதனால் பறவைகளின் வரத்து வெகுவாக அதிகரித்திருந்தது. வன அலுவலர்களும் பள்ளி மாணவர்களும் இணைந்து இந்தக் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் பறவைகள் சரணாலயங்களில் கணக்கெடுப்புப் பணி இது குறித்து வனத் துறை அலுவலர்களிம் கேட்டபோது, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து சரணாலயங்களில் 20 விழுக்காடு பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் 15 விழுக்காடு புதிய பறவைகள் வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க :'ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'