தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை கடற்படை அட்டூழியம்: மாயமான 4 மீனவர்களில் இருவர் சடலமாக மீட்பு! - srilanka navy

புதுக்கோட்டை: விசைப்படகு மீது இலங்கை கடற்படை படகு மோதியதில் 4 மீனவர்கள் மாயமான நிலையில், 2 மீனவர்களின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டன.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

By

Published : Jan 21, 2021, 11:14 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டிணத்திலிருந்து, ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான படகில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜ்ஷாம், செந்தில்குமார், மெசியா ஆகிய 4 மீனவர்கள் ஜனவரி 18ஆம் தேதி, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே படகு பழுதாகி நடுக்காட்டில் நின்றது. அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் உதவி செய்வார்கள் என மீனவர்கள் நினைத்த நிலையில், அதற்கு நேர்மாறாக மீனவர்களின் கப்பலை மோதினர். இந்த விபத்தில் படகு மூழ்கி நான்கு மீனவர்களும் நடுக்கடலில் மாயமாகினர்.

இதைத்தொடர்ந்து, கடலில் மூழ்கிய 4 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், செந்தில், சாம் ஆகிய இரண்டு மீனவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மிகுந்த கொந்தளிப்புடன் இருந்து வருகின்றனர். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details