தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 14, 2021, 6:11 PM IST

ETV Bharat / state

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50ஆம் ஆண்டு வெற்றி நாள்: கடற்படை வீரர்கள் மரியாதை

இந்தியா பாகிஸ்தான் போரின் (1971) 50ஆம் ஆண்டு வெற்றி நாளை முன்னிட்டு, உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படைத் தளத்திற்கு ஜோதி கோப்பை கொண்டுவரப்பட்டது.

War victory flame
கடற்படை வீரர்கள் மரியாதை

ராமநாதபுரம்:1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றிபெற்றது. இதைக் கொண்டாடும்விதமாக இந்தியா முழுவதும் உள்ள ராணுவத் தளங்களுக்கு, ஸ்வர்ணம் விஜய் வர்ஷா ஜோதி கோப்பை கொண்டுசெல்லப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்கரைத் தளத்திற்கு, ஸ்வர்ணம் விஜய் வர்ஷா தீப கோப்பை நேற்று (ஜூலை 13) தூத்துக்குடியிலிருந்து கட்டபொம்மன் கடற்படைத் தளத்திலிருந்து கொண்டுவரப்பட்டது.

இந்த ஜோதி கோப்பையை ஏந்தி, இன்று (ஜூலை 14) இந்தியா-பாகிஸ்தான் போரின் 50ஆம் ஆண்டு வெற்றி நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கடற்படை வீரர்கள் மரியாதை

இந்திய ராணுவ அலுவலர் கரம் சிங் ஜோதி கோப்பையைக் கொண்டுவர, ஐஎன்எஸ் பருந்து கடற்படை அலுவலர் வெங்கடேஷ் ஜோதியினைப் பெற்றுக்கொண்டு மரியாதை செய்தார். கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் தீப கோப்பையை ஏந்தி வலம்வந்தனர்.

உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படைத் தளத்திலிருந்து ராணுவ வீரர் தீப கோப்பை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. அங்கிருந்து, நாளை (ஜூலை 15) ராமேஸ்வரம், அப்துல் கலாம் நினைவிடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்குத் தீப கோப்பை கொண்டுசெல்லப்படும்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஐஎன்எஸ் பருந்து கடற்படை அலுவலர் வெங்கடேஷ், "சமீப காலமாக மன்னார் வளைகுடா பகுதியில் கடத்தல் அதிகமாக நடந்துவருகிறது. இதனைக் கண்காணிக்க ரோந்துப் படை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்படை வீரர்கள் மரியாதை

கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை

ஐஎன்எஸ் பருந்து கடற்படை, கடலோரக் காவல்படையினர் மேலும் தூத்துக்குடி கட்டபொம்மன் கடற்படையினர் இணைந்து கடத்தலைத் தடுப்பதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். கூடுதலாக கண்காணிப்புப் பணிகள் நடைபெறும்பட்சத்தில் கடத்தல்கள் வெகு விரைவாகத் தடுக்கப்படும்.

ஐஎன்எஸ் பருந்து உள்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளுக்குத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் தந்துவிட்டது. ஏற்கனவே ரயில்வே, ராணுவ ஒப்புதல்கள் பெறப்பட்டதால், மிக விரைவில் ஐஎன்எஸ் பருந்து விரிவாக்கப் பணி தொடங்கப்படும். கூடுதலாக ஹெலிகாப்டர்கள், விமானங்கள் வாங்கப்பட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் அதிகப்படுத்தப்படுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: நாட்டில் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை - உயர் நீதிமன்றம் வேதனை

ABOUT THE AUTHOR

...view details