ராமநாதபுரம்:இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இதனிடையே ஒன்பது இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இந்த 9 பேரும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்தவர்கள். படகு மூலம் மன்னாரில் இருந்து புறப்பட்டு இன்று (ஏப். 10) அதிகாலை தனுஷ்கோடி வந்தடைந்தனர்.
அங்கிருந்து பேருந்து மூலமாக மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றுள்ளனர். அவர்களிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் பகுதியில் இருந்து மேலும் 10 பேர் மணல் தீடைக்கு வந்தடைந்துள்ளனர்.