தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் உடற்தகுதித் தேர்வில் 1,801 பேர் தேர்வு - ராமநாதபுரம் எஸ்பி - ராமநாதபுரம் எஸ்.பி

ராமநாதபுரத்தில் நடைபெற்ற காவலர் உடற்தகுதித் தேர்வில் ஆயிரத்து 801 பேர் தேர்வாகியுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

காவலர் உடற்தகுதித் தேர்வில் 1,801 பேர் தேர்வு
காவலர் உடற்தகுதித் தேர்வில் 1,801 பேர் தேர்வு

By

Published : Aug 13, 2021, 8:17 AM IST

ராமநாதபுரம்: சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு, மீட்புப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வு ஜூலை 26ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 11 நடைபெற்றது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவிக்கையில், "உடற்தகுதித் தேர்விற்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட இரண்டாயிரத்து 766 ஆண் விண்ணப்பதாரர்களில் 548 நபர்கள் பங்கேற்கவில்லை.

இத்தேர்வில் பங்கேற்ற இரண்டாயிரத்து 218 நபர்களில் ஆயிரத்து 617 ஆண்கள் தகுதிப் பெற்றுள்ளனர். 601 ஆண்கள் தகுதிபெறவில்லை. மேலும், இத்தேர்விற்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட 714 பெண் விண்ணப்பதாரர்களில் 175 நபர்கள் பங்கேற்கவில்லை.

தேர்வில் பங்கேற்ற 539 நபர்களில் 184 பெண்கள் தகுதிபெற்றுள்ளனர். 355 பெண்கள் தகுதிபெறவில்லை. மேலும், ஆண்கள் ஆயிரத்து 617 பேரும், பெண்கள் 184 பேர் என மொத்தம் ஆயிரத்து 801 நபர்கள் தகுதிபெற்றுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு'

ABOUT THE AUTHOR

...view details