ராமநாதபுரம்:சத்திரக்குடி அருகே உள்ள போகலூரில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரால் நேற்று (ஆக.15) சுங்கச்சாவடி முற்றுகையிடப்பட்டது.