நடிகர் ஜே.கே. ரித்தீஷ் நேற்று ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஜே.கே ரித்தீஷ் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
ராமநாதபுரம்: மாரடைப்பால் காலமான நடிகரும், அரசியல் பிரமுகருமான ஜே.கே. ரித்தீஷின் உடல் சொந்த ஊரான மணக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் ஜே.கே ரித்தீஷ்
இது அதிமுகவினர் மற்றும் அவரது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரான மணக்குடியில் வைக்கப்பட்டது. இந்நிலையில, ரித்தீஷின் உடலுக்கு திரைப்பட நடிகர்கள் கார்த்திக், மனோ பாலா, சின்னி ஜெயந்த், ராணா, மயில்சாமி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்றுமாலை சொந்த ஊரில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.