ராமநாதபுரம்: மண்டபம் அடுத்த மரக்காயர் பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ரசூல், சதாம், அப்துல் முகைதீன். இவர்கள் இலங்கையிலிருந்து 14 பேரை கள்ளத்தனமாக படகில் கடந்த ஜுன் 19ஆம் தேதி ஏற்றி வந்தனர். மண்டபம் மரைக்காயர் பட்டிணத்தில் இறக்கிவிடப்பட்ட இவர்கள், அங்கிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சென்றுள்ளனர்.
இதையடுத்து கர்நாடக மாநில காவல் துறையினர் வாகன சோதனையில் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் தாங்கள் கள்ளத்தனமாக படகில் இலங்கையில் இருந்து வந்ததாக கூறியுள்ளனர். இவர்களுக்கு உதவி செய்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.