தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரும்பு வியாபாரி வீட்டில் 14 சவரன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை! - நகை திருட்டு

ராமநாதபுரம்: கமுதியில் இரும்பு வியாபாரி வீட்டில் 14 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இரும்பு வியாபாரி வீட்டில் 14 சவரன் நகை திருட்டு
இரும்பு வியாபாரி வீட்டில் 14 சவரன் நகை திருட்டு

By

Published : Feb 10, 2021, 3:23 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு சேதுபதி நகரை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

தெய்வேந்திரன் வழக்கம்போல் இரும்பு வியாபாரம் செய்ய சென்றுள்ளார். அவரது மனைவியும் வீட்டில் இல்லாததை அறிந்த திருட்டு கும்பல் அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 14 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளது.

பின்னர், வீடு திரும்பிய ஜோதிகமுதி அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இதையடுத்து, உடனடியாக தெய்வேந்திரனின் மனைவி ஜோதிகமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருட்டு கும்பலைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: போலீஸ் எனக்கூறி நடந்து சென்ற பெண்ணிடம் 18 சவரன் தங்க நகை பறிப்பு

ABOUT THE AUTHOR

...view details