ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டறியுமாறு மாவட்டத்திலுள்ள அனைத்து காவலர்களுக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் அறிவுறுத்தியிருந்தார்.
சட்டவிரோத மது, புகையிலை விற்பனை: 129 பேர் கைது - illegal liquor and Tabaco selling
ராமநாதபுரம்: அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த 129 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதனடிப்படையில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய தீவிர சோதனையில், பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மதுபானங்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 85 நபர்களையும், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 44 நபர்களையும் என மொத்தம் 129 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ஆயிரத்து 688 புகையிலை பாக்கெட்டுகள், 683 மதுபான பாட்டில்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது.