ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியிலிருந்து கருவேல மரங்கள் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, லாரியில் கடத்தப்பட்டு வந்துள்ளது. இதைப் பொதுமக்கள் கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில், மரங்களைக் கடத்தி செல்லும் லாரிகளை புதுரோடு மீனவ கிராம மக்கள் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், உடனடியாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், லாரியை சோதனை செய்ததில், கருவேல மரங்கள் குறித்து எந்த விதமான முறையான ஆவணங்களும் இல்லை என தெரிய வந்தது
கடத்த முயன்ற 120 டன் கருவேல மரங்கள் பறிமுதல் இது குறித்து வனவர் பாண்டியராஜன் கூறுகையில், " முறையான விளக்கமளிக்காமல், உயர் அலுவலர்கள் ஒப்புதலோடு மரங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கூறுகையில், கருவேல மரங்கள் 120 டன் எடுத்துச் செல்ல வனத்துறையினர் எந்த விதமான டெண்டரும் அளிக்காமல், சட்ட விரோதமாக எடுத்துச் செல்ல துணையாக இருந்து வருவதாகப் புகார் தெரிவித்தனர். தற்போது, சிறைப்பிடிக்கப்பட்ட மூன்று லாரிகளும் தங்கச்சிமடம் வனத்துறையினர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் வெங்காயம் லாரி கவிழ்ந்து விபத்து!