இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சிக்குள்பட்ட ஆய்குடி அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட முட்டைகள் கெட்டுப்போய் இருந்தது தெரிய வந்துள்ளது.
கரோனா ஊரடங்கால் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள், குழந்தைகளுக்கு உலர் பொருள்களாக அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
ஆய்க்குடி அங்கன்வாடி மையத்தில் 5 வயதுக்குள்பட்ட 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த மையத்தில் ஒரு குழந்தைக்கு 10 முட்டை வீதம் 20 குழந்தைகளுக்கு 200 முட்டைகள் அங்கன்வாடி மைய பொறுப்பாளரால் வழங்கப்பட்டது.
அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட அழுகிய 120 முட்டைகள் அவற்றில் 120க்கும் மேற்பட்ட முட்டைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு கெட்டுப்போய் இருந்தன.
உடைக்காமல் அவித்து குழந்தைகளுக்கு கொடுத்து இருந்தால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதையை சந்திக்க நேரிட்டிருக்கும். ஆனால், முன்கூட்டியே கண்டறிந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க : முட்டை விலை 20 காசுகள் சரிவு