தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 110 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்! - ஊரடங்கு தளர்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 வழித்தடங்களில் அரசு புறநகர் மற்றும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரத்தில் 110 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்!
ராமநாதபுரத்தில் 110 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்!

By

Published : May 23, 2021, 3:55 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு 2 வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு நாளை 24ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கை அரசு பிறப்பித்துள்ளது.

அதன்படி, நேற்றும் (மே.22), இன்றும் (மே.23) அனைத்துக் கடைகள் உள்ளிட்டவைகள் திறந்து இருக்கும் என்றும், மாநிலத்திற்குள் அனைத்து அரசு, தனியார் போக்குவரத்தும் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் நேற்று (மே.22) மாலை 4 மணி முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. நகர்ப் பேருந்தை பொறுத்தவரையில் மாவட்டத்திற்குள் ஒரு சில பேருந்துகளும், புறநகர்ப் பேருந்துகளில் சென்னை, மதுரை, திருச்சி என மொத்தம் 5 பேருந்துகளும் இயக்கப்பட்டன.

ஊரடங்கில் திடீரென தளர்வு அறிவிக்கப்பட்டதால் பஸ்களில் பயணிகளின் கூட்டம் இன்றி வெறிச்சோடி சென்றன. இயக்குவதற்காக தயார் நிலையில் கொண்டுவரப்பட்ட பேருந்துகளும், பயணிகள் வராததால் காத்துக்கிடந்தன. இன்று (மே.23) அதிகாலை 3 மணி முதல் புறநகர், நகரப் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

அதன்படி புறநகர் வழித்தடங்களில் 49 வழித்தடங்களில் 49 பேருந்துகளும் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும் எனவும்; நகர்ப் பேருந்துகளை பொறுத்தவரையில், 61 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் எனவும்; நாளை(மே.24) காலை 4 மணி வரை இந்தப் பேருந்து இயக்கம் நடைபெறும் என்றும் போக்குவரத்து புறநகர் மேலாளர் தனபால், நகர்ப் பேருந்து மேலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:நடமாடும் காய்கறி விற்பனை: கனிமொழி எம்பி தொடங்கிவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details