ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை விரட்டியடித்தனர்.
தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை..! - தமிழக மீனவர்
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 11 தமிழக மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப் படகுகளை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்தனர்.
![தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை..!](https://etvbharatimages.akamaized.net/breaking/breaking_1200.png)
Breaking News
அதோடு மட்டுமில்லாமல், அவர்கள் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 11 மீனவர்களைச் சிறைபிடித்தனர். இலங்கைக் கடற்படையின் இத்தகைய கைது நடவடிக்கை, மீனவர்கள் மத்தியில் பெரிய அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.