தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச பயணம்: ராமநாதபுரத்தில் 11.14 லட்சம் பெண்கள் பயன் - free bus travel scheme for women

பேருந்தில் இலவச பயணத் திட்டம் மூலம் ராமநாதபுரத்தில் 11.14 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

அரசுப்பேருந்து
அரசுப்பேருந்து

By

Published : Jul 25, 2021, 8:17 PM IST

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.

இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில், பணிபுரியும் மகளிர் மற்றும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் செயல்படும் 6 பணிமனைகளின் நகரப் பேருந்துகளில் இதுவரை 11 லட்சத்து 14 ஆயிரத்து 662 மகளிர். 5 ஆயிரத்து 211 மாற்றுத்திறனாளிகள். 292 மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் உதவியாளர்கள்.

266 திருநங்கைகள் இலவசமாகப் பயணம் செய்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணை நிவாரணம்' - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details