கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 14 நாள்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,073 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் அதிகபட்சமாக பரமக்குடி காவல் துணை கோட்டத்தில் 230 வழக்குகளும், ராமநாதபுரம் காவல் துணை கோட்டத்தில் 216 வழக்குளும் பதிவாகியுள்ளன.
ஊரடங்கு உத்தரவு மீறல்: ராமநாதபுரத்தில் 921 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! - ஊரடங்கு உத்தரவு மீறல்
ராமநாதபுரம்: ஊரடங்கு உத்தரவை பின்பற்றாததால் ராமநாதபுரத்தில் 1,073 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 921 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவு மீறல்: இரமாநதபுரத்தில் 921 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
இந்த வழக்குகளில் 1,175 பேர் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 921 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பின்பற்றாவிட்டால் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த இயலாது என்பதை உணர்த்து மக்கள் பொறுப்புடன் வீட்டில் இருக்க வேண்டும் என காவல் துறையினர் தொடர்ந்து அறிவுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:இரண்டு மணி நேரத்தில் 500 வாகனங்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி
Last Updated : Apr 9, 2020, 10:29 AM IST