ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக, மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக பச்சை புலி இறால் வகைகள் கடலில் விடப்படுவது வழக்கம். அதன்படி, தங்கச்சிமடம் துறைமுகப் பகுதியில் 10 லட்சம் பச்சை புலி இறால் குஞ்சுகள் கடலின் புல்வெளி பகுதியில் இன்று (நவம்பர் 7) விடப்பட்டன.
தங்கச்சிமடம் அருகே 10 லட்சம் பச்சை புலி இறால் குஞ்சிகள் கடலில் விடப்பட்டன! - பச்சை புலி இறால் குஞ்சிகள் கடலில் விடப்பட்டன
ராமநாதபுரம்: தங்கச்சிமடம் அருகே மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மையம் சார்பாக 10 லட்சம் பச்சை புலி இறால் குஞ்சிகள் கடலில் விடப்பட்டன.

green tiger prawn
green tiger prawn
அப்போது மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஜெயக்குமார், ஐ.சி.ஏ.ஆர்-சி.எம்.எஃப்.ஆர்.ஐ உறுப்பினர் முரளிதரன், ஐ.சி.ஏ.ஆர்-சி.எம்.எஃப்.ஆர்.ஐ.,யின் மண்டபம் பிராந்திய மையத்தின் விஞ்ஞானிகள், பணியாளர்கள், மீனவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் கடல் வளர்ப்பு திட்டத்தை ஒருங்கிணைத்தனர்.