ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் அதன் மாநில துணைத் தலைவர் தினகரன் தலைமையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நியாய விலைக்கடை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும், கரோனா காலத்தில் பணிபுரியும் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு முகக் கவசம், பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவை மாதம் மாதம் வழங்க வேண்டும், அனைத்து நியாயவிலை கடைகளிலும் 100 விழுக்காடு உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.