தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவணமில்லாமல் சிக்கிய ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி - 1 லட்சத்து 79 ஆயிரம்

ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் கொண்டு வந்த கோழி வியாபாரியிடம் இருந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருப்பதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

http://10.1 1 லட்சத்து 79 ஆயிரம் பணம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்0.50.85//tamil-nadu/10-March-2021/tn-rmd-03-election-flying-squad-seize-pic-script-tn10040_10032021150537_1003f_1615368937_425.jpg
http://10.1 1 லட்சத்து 79 ஆயிரம் பணம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்0.50.85//tamil-nadu/10-March-2021/tn-rmd-03-election-flying-squad-seize-pic-script-tn10040_10032021150537_1003f_1615368937_425.jpg

By

Published : Mar 10, 2021, 5:29 PM IST

ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட கோழி வியாபாரியின் பணம், பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையின் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின்பேரில் வந்த கறிக்கோழி வியாபாரியின் வாகனத்தை சோதனை செய்தனர். அதில் சரவணக்குமார் உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சத்து 79 ஆயிரம் பணம் வைத்திருப்பது தெரியவந்தது.

இதனை பறக்கும் படை அதிகாரி மரகதமேரி தலைமையிலான அலுவலர்கள் பறிமுதல் செய்து முதுகுளத்தூர் கருவூலத்தில் செலுத்தினர்.

தற்போது, நேற்றைய தினம் வரை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் 27 நபர்களிடமிருந்து உரிய அனுமதி இன்றி, எடுத்துவரப்பட்ட 30 லட்சத்து 18ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details