ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே சந்தேகத்திற்குரிய வகையில் இலங்கையைச் சேர்ந்த படகு செல்வதை இந்திய கடற்படையினர் கவனித்துள்ளனர்.
இதனையடுத்து, படகிலிருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த அலோசியஸ், அந்தோனி சுகந்த், சகாய வினிஸ்ரோ என்பது தெரியவந்தது. இவர்கள் தங்கச்சி மடம் பகுதியிலுள்ள மீனவர்களிடம் கடத்தல் தங்கத்தை அளிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, படகின் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த 100 கிராம் அளவுள்ள 35 கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு 1 கோடியே 48 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவித்தனர்.