புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயலைச் சேர்ந்தவர் வினோத் சக்கரவர்த்தி(27). நேற்றிரவு இவரது வீட்டருகே வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இளைஞர் வெட்டிக் கொலை - காவல் துறையினர் விசாரணை - காவல்துறையினர் தீவிர விசாரணை
புதுக்கோட்டை: அடப்பன்வயல் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் வெட்டிக் கொலை
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை நகர காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கி பாதுகாப்புடன் நடந்த மொய்விருந்து: ரூ. 4கோடி வசூல்!: