புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ஆரியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி கடந்த மாதம் 18ஆம் தேதி வீட்டிலிருந்து கடைக்கு பொருள்கள் வாங்க சென்றபோது மாயமானார்.
பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது! - Pudukottai district news
புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
வாலிபர்
இதுகுறித்து அன்னவாசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள செட்டியாப்பட்டிப்படுகையை சேர்ந்த சின்னத்தம்பி மகன் தாமஸ்டிக்ரூஸ் (20) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து காவல் துறையினர் சிறுமியை மீட்டு, தாமஸைபோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.