தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் பங்கில் 30 ஆயிரம் ரூபாய் திருடிய இளைஞர் கைது! - youngster arrested

புதுக்கோட்டை: பொன்னமராவதியில் தனியார் பெட்ரோல் சேமிப்பு நிலையத்திலிருந்து இளைஞர் ஒருவர் 30 ஆயிரம் ரூபாயை சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Dec 11, 2020, 10:33 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் தெற்குநகரைச் சேர்ந்தவர் கங்கா தேவன் (26). இவர் நேற்று முன்தினம் இரவு (டிச. 09) மது அருந்திவிட்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது தனது பைக்கில் பெட்ரோல் இல்லாத காரணத்தினால், கொப்பனாபட்டியிலுள்ள பெட்ரோல் சேமிப்பு நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு இரவுப் பணியாளர்கள் ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் தானாக, பைக்கில் பெட்ரோல் நிரப்பியுள்ளார். அத்தோடு அங்கிருந்த ஊழியர்களின் பணப்பையில் இருந்த, 30,000 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து காலை எழுந்து பார்க்கும்போது பணம் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், பெட்ரோல் சேமிப்பு நிலையம் உரிமையாளர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.

அத்தகவலின் அடிப்படையில் சென்று சிசிடிவி கேமரா மூலம், குற்றவாளியான கங்கா தேவனை கண்டுப்பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு காவல் துறையினர் கங்காதேவன் மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:புதுக்கோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details