புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பணம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவருடைய மகன் செல்வராஜ் (வயது-24). பட்டதாரியான இவர் வேலை தேடிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் வேலைக்கான விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் விமான நிலையத்தில் பணி உள்ளதாகவும், நல்ல சம்பளம் வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வாட்ஸ்அப் செய்தியை நம்பி ரூ. 1 லட்சம் ஏமாந்த இளைஞர்! - fake news
புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே வாட்ஸ்அப்பில் வந்த தகவலை நம்பி ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை பறிகொடுத்த பட்டதாரி இளைஞர் பணத்தை மீட்டுத்தரக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் அதில் செல்போன் எண்களும், மின் அஞ்சல் முகவரியும் இருந்துள்ளது. இதனை உண்மை என நினைத்த செல்வராஜ் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் வேலைக்காக முதல் தவணையாக ரூ. 25 ஆயிரமும், அடுத்தடுத்தபடியாக ரூ. 26 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டபோது இன்னும் பணம் வங்கி கணக்கில் செலுத்த கூறியபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார். பின்னர் இதுகுறித்து அன்னவாசல் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.