புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் 45 வயது மதிக்கத்தக்க பெண் 2019ஆம் ஆண்டு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளஞரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
ஆடு மேய்த்த பெண் பாலியல் வன்புணர்வு... இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை... - ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை
புதுக்கோட்டையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 45 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் நீதிபதி சத்யா பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க:11 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை