புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள சம்பானை கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா(20). இவர் அப்பகுதியிலுள்ள கிணற்றில் விழுந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இருவர் உடனடியாக ஓடிவந்து பெண்ணை மீட்பதற்காக கிணற்றில் குதித்தனர். ஆனால், கிணற்றின் ஆழம் அதிகம் என்பதால் அப்பெண் குதித்த உடனே கீழே சென்றுள்ளார்.
பெண்ணை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதால், இருவரும் அப்பகுதி காவல் துறையினருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகே பெண்ணை சடலமாக மீட்டனர்.