விராலிமலை தொகுதியில் போட்டியிடும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
நீ ஏன்யா வெயில்ல அலையிற; நாங்க உன்ன ஜெயிக்க வைக்கிறோம்! - விராலிமலை தொகுதி
புதுக்கோட்டை: விராலிமலை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பெண் ஒருவர் நீ ஏன்யா வெயில்ல அலையிற; நாங்க உன்ன ஜெயிக்க வைக்கிறோம்! என்னும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![நீ ஏன்யா வெயில்ல அலையிற; நாங்க உன்ன ஜெயிக்க வைக்கிறோம்! vijayabaskar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11086811-721-11086811-1616242142391.jpg)
vijayabaskar
இந்நிலையில், மாத்தூர் பகுதியில் பிரச்சாரத்தில் இருந்த அவரிடம் பெண் ஒருவர், ”கரோனா நோயிலிருந்து எங்க உசுர எல்லாம் காப்பாத்துன உன்னை நாங்க மறக்க மாட்டோம். நீ ஏன் வெயில்ல பிரச்சாரத்துக்கு வர. நிம்மதியா வீட்டில் ஓய்வு எடு. நாங்க உங்களை ஜெயிக்க வைக்கிறோம்” என்று உருக்கமாக பேசி அவரை நெகிழ வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீ ஏன்யா வெயில்ல அலையிற; நாங்க உன்ன ஜெயிக்க வைக்கிறோம்!
இதையும் படிங்க: நாயுடன் பேச்சுவார்த்தை; யாசகரிடம் யாசகம்! - மன்சூர் அலிகானின் பிரச்சார அலப்பறை!