தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆபத்துக்கு கால் செய்தால் அலட்சியம்' - பெண்கள் சேவை மையத்திற்கே சோதனை - Pudukkottai women welfare officers

"50 வயது மதிக்கத்தக்க பெண் சாலையில் மயங்கி கிடந்ததை கண்டு புதுக்கோட்டை ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் காட்டிய அலட்சியம், முகச்சுளிப்பை ஏற்படுத்தியது" என்று சமூக செயற்பாட்டாளர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெண்கள் சேவை மையத்திற்கே சோதனை
பெண்கள் சேவை மையத்திற்கே சோதனை

By

Published : Jul 2, 2021, 7:11 PM IST

காவல்துறை என்றால் 100, ஆம்புலன்ஸ் என்றால் 108, தீயணைப்புத் துறை என்றால் 101 என பொதுமக்கள் அவசர உதவிக்கு அழைக்க தனித்தனியே எண்கள் இருக்கின்றன. இந்த சூழலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கவும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கிலும் ‘181’ என்ற இலவச சேவையை மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

பெண்களே.. ஆபத்தில் அழையுங்கள்

முதல் கட்டமாக டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் அதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இந்த உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு, மருத்துவ உதவி, சட்ட உதவி, காவல் துறை உதவி, உளவியல், சமூக ஆதரவு, ஸ்காலர் ஷிப் வசதி, மீட்பு மற்றும் தங்கும் வசதி ஆகியவையை பெண்கள் கேட்டுப் பெற முடியும்.

ஹெல்ப்லைன்

மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, உடல் - மனநலப் பாதிப்பு ஆகியவற்றிலிருந்து தற்காத்து கொள்ளவும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டின் எந்த மூலையைலிருந்தும் 24 மணி நேரமும் இந்த கட்டணமில்லா சேவைக்கு தொடர்பு கொள்ளாலம்.

பெயரளவில் மட்டுமே சேவை மையம்

இதற்கென தமிழ்நாடு முழுவதும் சேவை மையங்களும் செயல்பட்டுவருகிறது. இந்த சேவை மையத்துடன் எல்லா காவல் நிலையங்களும் இணைக்கப்பட்டுள்ளதால் உடனடியாக உதவி கிடைக்கும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என சமூக நலத்துறை அவ்வப்போது கண்காணிக்கும்.

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த சேவை மையம்

புதுக்கோட்டை மாவட்டத்திலும் சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டுவருகிறது. பெண்களுக்கான இந்த உதவி மையம் செயல்பட்டு வருவது குறித்து மாவட்டத்தில் உள்ள 90 விழுக்காடு பெண்களுக்கு தெரியவில்லை. இந்த துறையும் பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர்கள் முற்றிலும் அலட்சியம் காட்டி வருவதாக புதுக்கோட்டை மாவட்ட சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நேற்று ( ஜூலை.1) இரவு 50 வயது மதிக்கத்தக்க பெண் சாலையில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

அலட்சியம் காட்டும் அலுவலர்கள்

அவ்வழியைச் சென்ற ஆசிரியர் ஒருவரும், பார்த்திபன் என்ற சமூக செயற்பாட்டாளரும் அவரை மீட்டு மருத்துமனையில் சேர்ப்பதற்காக பெண்கள் நல மையத்தை அணுகியுள்ளனர். ஆனால் அவர்கள், இந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார்.

சமூக செயற்பாட்டாளர் ஜெய் பார்த்திபன்

அதனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று அலட்சியமாக பதில் கூறி விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து இருவரும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு, மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகத்தின் உதவியுடன் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மொத்தம் 7 அலுவலர்கள் பணிபுரிகின்றனர் . இதுதொடர்பாக தலைமை அலுவலர்கள் நிர்மலா ராணி, சத்யப்பிரியா அவர்களிடம் கேட்டும் முறையாக பதில் அளிக்கவில்லை. உடனடியாக இவர்களின் அலட்சிப்போக்கை மாவட்ட ஆட்சியர், கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் ஜெய் பார்த்திபன் கோரிக்கை விடுக்கிறார்.

மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம்

இது முதல்முறை அல்ல

இது குறித்து அவர் கூறுகையில், "இது முதல்முறை அல்ல. இதே போல பலமுறை நடந்துள்ளது. சாலையோரத்தில் ஆதரவின்றி மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு 181 என்ற எண்ணை அழைத்தால் சென்னையிலிருந்து புதுக்கோட்டை மாவட்ட எண்ணிற்கு கான்ஃபரன்ஸில் இணைக்கிறார்கள்.

பின் இதோ வருகிறோம், அதோ வருகிறோம் என தாமதிப்பது, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க மறுப்பது, காவல் துறையினரிடம் பெட்டிஷன் எழுதி கொண்டு வாருங்கள் என அலைக்கழிப்பது, இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என இன்னொரு அலுவலரை கைகாட்டி நழுவிச் செல்வது போன்ற செயல்களையே ஒருங்கிணைந்த பெண்கள் நல சேவை அலுவலர்கள் தொடர்ந்து செய்துவருகின்றனர்" என்று குற்றஞ்சாட்டினார்.

சமூக ஆர்வலர் கிழி

மேலும் பேசிய அவர், "இப்படி ஒரு எண் இருப்பதே பலருக்கும் தெரியாது. இதுகுறித்து அந்த துறையினரே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் இதை செய்வதில்லை. பதிலாக, தெரிந்த சிலரும் உதவிக்கு அழைத்தால் தட்டிக் கழிக்கின்றனர். 24×7 முறையில்தான் இந்த துறை செயல்பட வேண்டும்.

ஆனால் மாலை 4 மணிக்கெல்லாம் அலுவலகம் பூட்டி இருக்கிறது. எங்களைப் போல சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு இது பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் தயவுகூர்ந்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பெண்களுக்கெதிரான வன்முறை குறித்து நாம் நம்மிடையே கேட்க வேண்டிய கேள்விகள்

ABOUT THE AUTHOR

...view details