தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

புதுக்கோட்டை: வரதட்ணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவல் துறையினர் தடுத்தனர்.

By

Published : Mar 16, 2021, 2:09 PM IST

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் மனு அளிக்க வந்த பெண், ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட காவல் துறையினர் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தினர்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியை சேர்ந்த அன்பரசி என்பது தெரியவந்தது. அன்பரசியின் கணவர் பரமசிவம் தன் குடும்பத்தாருடன் இணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக வரதட்சணைக் கேட்டு துன்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அன்பரசி பலமுறை புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியிடம் மனு அளிப்பதற்காக நேற்று (மார்ச்15) அன்பரசி ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

ஆட்சியரை சந்தித்து மனு அளித்த சில மணித்துளிகளில் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் உடல் மீது ஊற்றி அன்பரசி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதைக் கண்ட காவல் துறையினர் அந்தப் பெண் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:திமுக தொண்டரின் மண்டையில் உதித்த உதயசூரியன்

ABOUT THE AUTHOR

...view details