தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்" - விஜயபாஸ்கர் வேண்டுகோள் - பிளாஸ்மா தானம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை : பிளாஸ்மா தானம் பலனளித்து வருகிறது என்றும், கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரியுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

By

Published : Aug 8, 2020, 12:58 PM IST

புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை, நரிமேடு பகுதிகளில் தலா 45 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணிய உரமாக்கும் மையங்களை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.

அதன்பின் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளின் சிறப்பான சிகிச்சையினால் அதிகமானோர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பிளாஸ்மா தானம் பலனளித்து வருகிறது.

எனவே கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. எனவே மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 14 நாள்களுக்கு பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம். தற்போது வரை சென்னையில் 57 பேருக்கும், மதுரையில் ஏழு பேருக்கும் பிளாஸ்மா தானம் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதற்கு ஏதுவாக சென்னையில் இரண்டு கோடி மதிப்பில் பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்துள்ளார். பிற மாவட்டங்களிலும் பிளாஸ்மா வங்கிகளைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தொடர்ந்து பேசிய அவர், "புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று தளங்களுடன் கட்டப்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தில், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் 300 படுக்கைகள் கொண்ட அதிநவீன கரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'பாகுபலி' இயக்குநருக்கு கரோனா! தனிமைக்குப் பின் பிளாஸ்மா தானத்துக்கு தயார்

ABOUT THE AUTHOR

...view details