புதுக்கோட்டை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நேற்று வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் அதற்கான செயலி பற்றிய அறிக்கையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர்,
புதுக்கோட்டையில் பயன்பாட்டிற்கு வந்த வாக்காளர்கள் செயலி... - Pudukkottai District collector Umamageswari byte
புதுக்கோட்டை: வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியினை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அதற்கான செயலி பற்றிய அறிக்கையை வெளியிட்டார்
"இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை வாக்காளர்களே சரிபார்த்து திருத்தம் செய்து கொள்ள வாக்காளர் செயலி எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதை பயன்படுத்தி அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான வரைவு பட்டியல் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்படும்." என்று கூறினார்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தெருவிளக்குகள், குடிநீர் பிரச்சனை, சாலை வசதிகள், போன்றவை குறித்து புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்களை அறிமுகம் செய்து வைத்த அவர் ஏரி, குளம், நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் தெரிவித்துள்ளார்