புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஆண்டுதோறும் மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, திருப்பத்தூர், லால்குடி, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 20 அணிகள் கலந்து கொண்டு, விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதில் முதல் பரிசை அல்லூர் அணியும், 2ஆவது பரிசை பாகனேரி அணியும், 3ஆவது பரிசை லால்குடி அணியும், 4ஆவது பரிசை அன்னவாசல் அணியும் தட்டிச் சென்றன.