புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்குள்பட்ட கத்தலூர் ஊராட்சியில் தண்ணீர் குழாய்களும் மின்மோட்டார்களும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது.
காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் - தண்ணீர் கேட்டு புதுக்கோட்டையில் பெண்கள் போராட்டம்
புதுக்கோட்டை: பெண்கள் காலி குடங்களுடன் விராலிமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் விராலிமலையில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:54:25:1606904665-tn-pdk-02-viralimalai-ladies-protest-visual-scr-img-7204435-02122020143149-0212f-1606899709-1078.jpg)
விராலிமலையில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த அலட்சியத்தால் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் இன்று விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், ரவி, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், விராலிமலை காவல் ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.