தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'5 மாசமா முதியோர் பென்ஷன் வரல' அரசை விளாசிய பாட்டியின் வைரல் வீடியோ! - ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் திமுக அரசை கண்டித்து நடந்த அதிமுக நடந்த ஆர்ப்பாட்டத்தில், மூதாட்டி ஒருவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

By

Published : Dec 16, 2022, 2:16 PM IST

வைரல் வீடியோ

புதுக்கோட்டை: திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன்படி இலுப்பூரில் திமுக அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி ஒருவர், பேசிய வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசிய மூதாட்டி, “ கிழவன் அடுத்த மாசம் செத்தாலும் செத்துருவார் போல. அஞ்சு மாசமா முதியோர் பென்ஷன் காசு நின்னு போச்சு. முதியோர் பென்ஷன் காசுக்காக தாலுகா ஆபிசுக்கு போய் அலைஞ்சு பார்த்தேன், ’நீங்க உங்க அமைச்சர் விஜயபாஸ்கர் கிட்டப் போய் கேளு’ என்று சொல்லிபுட்டாங்க. இன்னைக்கு 70 ரூபாய் கட்டின வீட்டு வரி 500 ரூபாய் கட்டுறேன். 50 ரூபாய் கட்டுன கரண்ட் பில் 500 ரூபாய் கட்றேன். ஆனா இத்தோட ஒன்னு சொல்லிக்கிறேன் அடுத்தாப்புல அதிமுக ஆட்சி தான் வரணும்” என பேசியுள்ளார்.

இதையும் படிங்க:அரசு வளாகத்தில் திடீரென ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட போதை ஆசாமிகள்

ABOUT THE AUTHOR

...view details