தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமமுக நிர்வாகிகளுக்கும்,  பெண்களுக்கும் இடையே வாக்குவாதம்! - AMMK party member

புதுக்கோட்டை: வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் அமமுக நிர்வாகிகளுக்கும், அப்பகுதியில் உள்ள இரு பெண்களுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நிகழ்ந்தது. அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வாக்குவாதம்

By

Published : Apr 13, 2019, 10:46 PM IST

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளராக ஆனந்த் போட்டியிடுகிறார். ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி பகுதியில் வீடு வீடாகச் சென்று அக்கட்சியினர் பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்களிக்க கோரி பிரச்சாரம் செய்தனர்.

அப்போது ஒரு வீட்டில் இருந்த பெண்கள் இந்த கட்சிக்கு நாங்கள் ஏன் ஓட்டு போட வேண்டும் என்று பல்வேறு கேள்விகளை கேட்டு நிர்வாகிகளை கதற வைத்தனர். அப்போது எடுத்த அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது, அதில் கட்சி நிர்வாகிகள் டிடிவி தினகரனின் ஆதரவு வேட்பாளர் ஆனந்த் இங்கு போட்டியிடுகிறார் அவருக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள் என்று கூறுகின்றனர்.

அதற்கு அந்தப் பெண்கள் "எதற்காக நாங்கள் பரிசு பெட்டகத்துக்கு ஓட்டு போட வேண்டும்"என்று கேள்வி எழுப்புகிறார். புதிதாக மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் வந்து இருக்கிறார் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன் என்று அந்த நிர்வாகிகள் கூறுகின்றனர். அதற்கு அந்தப் பெண், தினகரனும், சசிகலா குடும்பமும்தான் அரசியலுக்கு வரவே கூடாது என்று ஏற்கனவே ஜெயலலிதா சொல்லி இருக்கிறார் ஆனால் ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஏன் இவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார்.

வாக்குவாதம்

அதற்கு நிர்வாகிகள் அது எல்லாம் பழைய கதை அம்மா அவர்கள் தமிழகத்திற்கு என்ன கெடுதல் செய்து இருக்கிறார்கள் என்று அந்தப் பெண்ணை பார்த்து கேட்கின்றார். அப்போது மற்றொரு பெண், செப்டம்பர் 22 அப்பல்லோ மருத்துவமனையில் அம்மாவுக்கு என்ன நடந்தது? பதில் சொல்லுங்கள் என்று கேட்க இரு தரப்புக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து அப்பகுதி பெண்களுக்கும், அமமுக நிர்வாகிகளுக்கும் காரசாரமான வாக்குவாதம் நிகழந்தது. இறுதியில் அமமுக நிர்வாகிகள் நாட்டை கெடுக்க வேண்டும் என்றால் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறிவிட்டு அவ்விடத்தில் இருந்து புறப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details