புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே உள்ள வீரமங்கலம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மெய்யர் (75). வயது முதிர்வு காரணமாக, இவர் நேற்று முன்தினம் (மே.21) காலமானார்.
இதையடுத்து இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக, வீரமங்கலம் கிராமம் வழியாக எடுத்து சென்றனர். அப்போது, கிராமத்திற்குள் உடலை எடுத்துச் செல்லக்கூடாது என்று வீரமங்கலம் பகுதி மக்கள் வழிமறித்தனர்.
இதில் ஆத்திரமடைந்த காமராஜ்நகர் பகுதி மக்கள், நடுரோட்டில் உடலை இறக்கி வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜ் நகரிலிருந்து, வீரமங்கலம் கிராமத்துக்குள் செல்லாமல் ஆற்று பகுதியில் உள்ள மயானத்திற்குச் செல்ல, வேறு வழியில் சடலத்தை முன்பு கொண்டு சென்று வந்தனர்.
அண்மைக்காலமாக, இந்த வழியாக கொண்டு செல்கின்றனர் என, வீரமங்கலம் கிராம மக்கள் தெரிவித்தனர். அதற்கு காமராஜ் நகர மக்கள், இந்த சாலை அனைவருக்கும் பொதுவான சாலை தானே, இந்த வழியாக உடலைக் கொண்டு சென்றால் என்ன என்று கேட்டனர்.