தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமுதாயக்கூடம் கட்டுவதை தடுக்க ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு - சமுதாயக்கூடம் கட்டுவதை தடுக்க வேண்டும்

புதுக்கோட்டை: பொது மக்களுக்கு பயன்படாத இடத்தை தேர்வு செய்து சமுதாயக்கூடம் கட்டுவதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

சமுதாயக்கூடம் கட்டுவதை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
சமுதாயக்கூடம் கட்டுவதை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

By

Published : Aug 11, 2020, 6:58 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூர் ஊராட்சி கலிய மங்கலம் கிராமத்தில் ஊராட்சி சார்பாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் பொதுமக்களுக்கு பயன்படாத வகையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தை தேர்வு செய்து ஒரு தரப்பினர் கட்டப்போவதாகக் கூறி வருகின்றனர்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிராமத்தில் உள்ள முக்கிய இடத்தில் சமுதாயக்கூடம் கட்டுவது வழக்கம். ஆனால் ஒரு பிரிவினர் மட்டும் அதிகாரத்தை பயன்படுத்தி ஊருக்கு ஒதுக்குப்புறமாக கட்டுவதை கண்டித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது, பொது இடத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details