தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் அடிப்படை வசதிகளுக்கு அல்லாடும் கிராமம்! - transport

புதுக்கோட்டை: டிஜிட்டல் இந்தியாவில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் புதுவயல் என்ற ஒரு கிராமம் இருக்கிறது என்ற செய்தி அனைவரின் புருவத்தையும் உயர வைத்துள்ளது.

அடிப்படை வசதிகளுக்கு அல்லாடும் கிராமம்

By

Published : May 4, 2019, 10:58 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புதுவயல் எனும் கிராமம். நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவு போன்று காணப்படுகிற இந்த புதுவயல் கிராமத்தில் அடிப்படை வசதிகளே இல்லை கிராம மக்கள் புலம்புகின்றனர். சுமார் 600 பேர் வசிக்கும் இந்த கிராமத்திற்கு செல்வதற்கு ஏழு கிலோமீட்டர் வரை நடந்து செல்ல வேண்டும். ஏனென்றால் பேருந்து வசதிகள் கிடையாது. ஒத்தையடி பாதையில் தான் செல்ல வேண்டும். அங்கு இருக்கும் மக்களுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் 10 கிலோ மீட்டருக்கு அப்பால் செல்ல வேண்டும். ஊரை சுற்றி விவசாய நிலங்கள், குளம், கிணறு என எதுவும் இல்லாததால் தொழில் வாய்ப்புகளும் இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தவிக்கும் புதுவயல் கிராம மக்களை சந்தித்து பேசியபோது அவர்கள் தெரிவித்ததாவது, "எங்கள் ஊர் வரை படத்திலாவது இருக்கிறதா? இருந்தால் கொஞ்சம் காட்டுங்களேன். இத்தனை ஆண்டுகாலமாக ஒரு சீரழிந்த பிழைப்பைத் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மருத்துவமனை, பள்ளிக்கூடம், ரேஷன் கடை, பேருந்து நிலையம், என எங்கு செல்ல வேண்டும் என்றாலும் சாலை வசதியோ, பேருந்து வசதியோ இல்லை. ஒரு நாளில் எங்களது ஊரில் எத்தனையோ உயிர்களை பறிகொடுத்து இருக்கிறோம். எங்களது குழந்தைகளின் கல்வி வாழ்க்கை வீணாகிவிட்டது.

பெண் பிள்ளைகளின் வாழ்க்கையும் கல்வி அறிவு இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது. எப்படியோ பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்தாலும் கூட மேற்படிப்பு தொடர்வதற்கோ பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. இதனால் உயிர் மட்டும் இருந்தால் போதும் என அனைவரும் குருவிக் கூட்டம் இருப்பது போல இந்த ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எத்தனை முறை மாவட்ட ஆட்சியரிடம் அதிகாரிகளிடம் எங்களது ஊருக்குத் தேவையான நன்மைகளை செய்யக்கோரி மனு கொடுத்தும் போராட்டம் செய்தும் எவ்வித பயனும் இல்லை. கழிவறை வசதி எங்கும் இல்லை.

புதுக்கோட்டையில் அடிப்படை வசதிகளுக்கு அல்லாடும் கிராமம்

நான்கு புறமும் துணியை கட்டி வைத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ரேஷன் கடை தூரமாக இருப்பதால் சரியான முறையில் பொருட்கள் வந்து சேருவதில்லை. பொருட்கள் தீர்ந்து விட்டது என கூறுகின்றனர். இதனால் சாப்பாட்டிற்கும் பஞ்மாக இருக்கிறது. ஆண்கள் தான் வேறு ஊர்களுக்குச் சென்று தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஓட்டு கேட்க கூட ஒருத்தரும் இங்கு வரவில்லை. ஏனென்றால், ஒத்தையடி பாதையில் அவர்கள் வருவதற்கு வழியும் இல்லை. அரசாங்கம் ஒரு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். எங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் ஊர் மக்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை" என்று வேதனை தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details